பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயரியல் 131 677-193 ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே. 3ር 578-194 ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி(ய்) இருபாற்கு முரித்தே தெரியுங் காலை. 37 679-195 தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும். 38 பா.வே. 1. தன்மைச் சுட்டிற் - சுவடி 1. 2. குரித்தே - சுவடி 1053 காகும் - பதிப்பு 67. இதற்குச் சுவடிச் சான்றில்லை. 680-196 இன்ன பெயரே யிவையெனல் வேண்டின் முன்னஞ் சேர்த்தி முறையி னுணர்தல்'. 39 பா.வே. 1. உணர்த்தல் - சுவடி 951: அத்துணைச் சிறப்பான பாடமன்று. 881-197 மகடூஉ மருங்கின் பாறிரி கிளவி மகடுஉ’ வியற்கை' தொழில்வயி னான. 40 பா.வே. 1. மகடு - பதிப்பு 76இல் சு.வே. பாறெரி' - பதிப்பு 49 மகடு - பதிப்பு 3. அச்சுப்பிழையாகக் கொள்ளலாம். . வியற்கைத் - சுவடி 48, 73, 115 பதிப்பு 49. 682-198 ஆவோ வாகும் பெயருமா ருளவே(ய்) ஆயிட னறிதல்' செய்யு ளுள்ளே. 41 பா.வே. 1. ஆதல் - சுவடி 951 பிழை. பொருட்பொருத்தமில்லை. டி கல்லாடம் தெ.பொ.மீ. பதிப்பின் (49) மூலத்தில் பால்தெரிகிளவி எனப்பாடமுள்ளது. ஆனால் உரை, பெண்பால் ஆண்பாலாகத் திரிந்து நின்ற சொல்' என்றே கூறுகிறது. எனவே கல்லாடர் கொண்ட பாடம் பால்திரி கிளவி எனத் தெளிவாகிறது. கழகப் பகிப்பnவம் பால்கிரிகிளவி என்ற பாடமே உள்ளது. ப.வெ.நா.