பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373 வதிதரு சோழ வேளாள மரபில் பதிதரு தாண்டவ ராயவேள் பயந்த நாட வருசுவி சேடசித் தாந்தி செங்குவ ளைத்தார் தங்குமணி மார்பன் நாமவே லைப்புவி நயக்கும் சாமு வேல் எனும் தகைமை யோனே. B 1 2. புதுவைத் தமிழ்ப்புலவர் பொன்னுசாமி முதலியாரின் சாத்துக்கவி ஒதநெடும் கடல்உலகோர் அறம்முதல் நாற் பொருட்பயன்உற்(று) உய்வான் ஆன்றோர் ஓதியபல் இயல்தமிழ்நூல்(ற்) கொள்கைஒருங்(கு) உணர்வரி(து) என்(று) உளத்துா(டு) உன்னி மேதகுதொல் காப்பியநன் னுரலினைக் காட் - டொடுவிரித்து விளங்க வைத்தான் தாதுகுபூம் பொழிற்பிறைசைச் சாமுவேல் - மன்னன்எனும் தமிழ்வல் லோனே. I இருநில வரைப்பின் இருள்அற இமைக்கும் இருசுடர் எனத்தமிழ் முனிவன் அருட்கிடன் ஆய புலவருள் தலைவன் அரும்பவ னந்தி ஈங்(கு) இருவர் தரும்இயற் றமிழ்ஒற் றுமைஇடை யிடைக்கண் தகும்வகை விரித்(து) இனி(து) அளித்தான் ஒருதனிக் கவிஞன் தாண்டவ ராயன் உதவிய சாமுவேல் மன்னே 2 3. தரங்காபுரம் சண்முகக் கவிராயர் அவர்களின் சாத்துக்கவி நிறைஆற்றைக் கடக்குநர்போல் இலக்கியமோ(டு) இலக்கணம்.ஆம் நெடுநீர் நீந்தித் துறைஆற்றின் ஒழுக்கியதொல் காப்பியநன் - னுாற்பயனைத் தொகுத்து முன்னூல்