பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 சொல் மாற்றம்-சொற்சுவை ஆய்வு மேலுள்ள நீண்ட சொல் அட்டவணையைக் கொண்டு அறிய வேண்டுவன வருமாறு: எழுத்து மாற்றங்கள்: பேச்சுத் தமிழும் எழுத்துத் தெலுங்கும் எழுத்துக் கன்னடமும் எழுத்து மலையாளமும் கிட்டத்தட்ட ஒன்றா யிருக்க, எழுத்துத் தமிழ் வேறுபட்டிருப்பதைக் காணலாம். இதற்கு, மேலுள்ள இரண்டாயிரம் எடுத்துக் காட்டுகளி லிருந்து ஒரே ஒரு எடுத்துக் காட்டை மட்டும் மீண்டும் நினைவு செய்துகொள்வோம்: - எழுத்துத் தமிழ் தலை’ என்பது. இது பேச்சுத்தமிழில் தல-தலெ’ என்றும், எழுத்துத் தெலுங்கில் "தல" என்றும், எழுத்துக் கன்ன டத்தில் தலெ’ என்றும், எழுத்து மலையாளத்தில் "தல" என்றும் வழங்கப் படுகிறது. தலை’ என்னும் எழுத்துத் தமிழ் தவிர, பேச்சுத் தமிழ், எழுத்துத் தெலுங்கு, எழுத்துக் கன்னடம், எழுத்து மலையாளம் ஆகிய நான்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியா யிருக்கக் காண்கிறோம். தல - தலெ’ என்பன கோச்சைத் தமிழ்; ஆனால், இவை, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய வற்றிற்கு இலக்கண - எழுத்து வடிவமாகும். இதிலிருந்து தெரிவதாவது, எழுத்துத் தமிழின் ஈற்று 'ஐ' என்பது, மற்ற நான்கிலும் 'அ' அல்லது எ’ ஆக மாறுகிறது என்ப தாம். துளு மொழியிலும் இந்த மாற்றம் உண்டு. துளுவில் 'தலை’ என்பது தரெ” எனப்படுகிறது. இதில், 'ஐ' என் பது 'எ' ஆனதோடு, லகரம் ரகரமாகத் திரிந்துள்ளது.