பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 இதுகாறும் கூறியதிலிருந்து தெரிவதாவது :- தமிழிலும் பேச்சு வழக்கில் சொல் இறுதி மெய்யெழுத்துகள் சரியானபோதுமான ஒலி பெறுவதில்லை - என்பதாம். கன்னட மொழியில் மெய்யீற்றுச் சொற்களே இல்லை என்னும் கருத்தோடு இந்தக் கருத்து ஓரளவு ஒத்து வருகின்ற தல்லவா? மற்றும், கன்னடத்திலும், இருள் =இருளு; தூள் =துளு, கூலி காரர்= கூலி காரரு என மெய்யீறு 'உ' சாரியை பெறுவதுண்டு. பேச்சு வழக்கில் தமிழிலும் எழுத்து வழக்கில் கன்னடத்திலும் மெய்யீறு ஒலிக்கப் பெறாமையும் ஒரு சில இடங்களில் 'உ' சாரியை வருவதும் இவ்விரு மொழிகளும் ஒத்த மொழிகள் என்பதற்குப் போதிய சான்று பகரலாம். பழங்கன்னடத்தில் உள்ள சொல்லாட்சி கள் மேலும் இக்கருத்துக்குத் துணை புரியலாம். வெங்-வென்: இனி, இங்கே ஒரு சுவையான சொல்லாட்சியைக் காண்பாம். தமிழில் வெந்' என்பதற்கும் சிறிதளவு ஒலி வேறுபாடுடைய வென்’ என்பதற்கும் முதுகு என்பது பொருள். வென்னிடுதல் என்றால், முதுகு காட்டி ஒடுதல் ஆகும். தமிழில் உள்ள வென்’ என்பதோடு ஒலித் தொடர் புடைய, வென்- வெனு- வென்னு என்பன தெலுங்கிலும், 'பென்னு’ என்பது கன்னடத்திலும் முதுகைக் குறிக்கும். தமிழ் வகரம் கன்னடத்தில் பகரமாக ஒலிப்பதுண்டு; இதன்படி 'வென்’ என்பது கன்னடத்தில் 'பென் ஆயிற்று. கன்னடத்தில் மெய்யீறு உள்ள சொல் இல்லை; மெய்யீறு இருப்பின் 'உ' சாரியை சேர்ந்து விடும் அல்லவா?இதன்படி 'பென்' என்பது பென்னு'ஆயிற்று.வென்,வெனு, வென்னு, பென்னு என்பவற்றின் அடிப்படைச் சொல்லாகத் தமிழில் உள்ள வெந் (வென்) என்பதற்கு ஒரு சுவையான இலக் கிய மேற்கோள் காண்பாம்: - -