உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 மஞ்சள்=மஞ்ச=மஞ்ஞ:மஞ்சு= மஞ்து. கழிந்த= கழிஞ்ஞ எனத் தகரத்திற்குப் பதிலாகவும் ஞகரம் வருவது உண்டு. ககரத்திற்குப் பதில் ங்கரம் வருவதுமுண்டு; தேங்காய்= தேங்கா=தேங்ங்;'மாங்காய்=மாங்கா=மாங்ங்.நரைத்த= நரச்ச; குறித்து=குறிச்சி; ஒருமித்து=ஒரு மிச்சு; சிரித்து= சிரிச்சி - எனத் தகரத்திற்குப் பதில் சகரம் வரும். இது பேச்சுத்தமிழிலும் உண்டு. 'ஐ' ஈற்றுக்குப் பதில் அ,எ வரு வதும் சொல் ஈற்றில் உகரச் சாரியை வருவதும் மலை யாளத்திலும் உண்டு. எண்ணுப் பெயர்களில் ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது இருபது, இருபத்திரண்டு, முப்பது, அறுபது, எழுபது, எண்பது,தொண்ணுாறு, நூறு, ஆயிரம் முதலிய எண்ணுப் பெயர்கள் தமிழிலும் மலையாளத்திலும் ஒரே மாதிரியா யிருப்பது குறிப்பிடத் தக்கது. மற்ற திராவிடமொழிகளில் இவ்வாறு இல்லை; சிறு சிறு மாற்றம் உண்டு. ‘ங்ப் போல் வளை’ மற்றும், மலையாளம் பற்றிய சுவையான செய்திகள் சில சொல்ல வேண்டும். ந. முதல் ங்ெள வரை தமிழில் உள்ள எழுத்துகளுள், இங்ங்னம், எங்ங்னம் என் ‘ங்’ மட்டுமே பயன் படுகிறது. பங்கு மங்கு என ‘ங்’ மெய்யும் பயன்படுகிறது. தனி'ங்' என்பதை ஒரு சொல் போல் கொண்டு அறு குறுணியளவு' என்னும் பொருளைக் குறிக்கும் எனச் சித்தர் தேரையர் தமது தைல வருக்கச் சுருக்கம்' என்னும் நூலில் கூறியுள்ளார். இவ்வாறு ங்,ங் என்பன மட்டும் பயன்படுகின்றன எனி னும், தமிழ் நெடுங் கணக்கு (எழுத்து) வரிசையில் ங் முதல் ங்ெள வரை உள்ள பன்னிரண்டு எழுத்துகளும் இடம்பெற் றுள்ளன. இதை எண்ணிய ஒளவையார், ங் என்பது தன்