உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறொருவர் ஆயுதத்தைக் கலம் (படைக்கலம்) என்ற னர்; மேலும்ஒருவர் ஒரு முகத்தல் அளவைக் கலம் (கல நெல்) என்றனர். ஒரு பகுதியினர் கோலைக் கழி என்ற னர்; இன்னொருவர் உப்பாற்றைக் கழி என்றனர். மற் றொருவர் மிகுதியைக் கழி என்றனர்; வேறொருவர் கழிதல்-கழித்தல் வினையைக் கழி என்றனர். இவ்வாறு ஒரே சொல்லே பல பொருள்களைக் குறித்தன. எல்லாப் பகுதியினரும் கலந்து விட்ட பின்னர், இந்த அமைப்புக்கு ஒருசொல் பல் பொருள்கள்’ என்னும் பெயர் வழங்கப் பட்டது. இலக்கிய வழக்கு: ஒரு பகுதியினர்க்கு இலக்கிய வழக்குச் சொல்லாக இருப்பது, இன்னொரு பகுதியினர்க்கு அன்றாடப் பேச்சு வழக்குச் சொல்லாக இருப்பதும் உண்டு. ஒரு பொருளை இரவல் கொடுத்து, அந்தப் பொருளை அதே அளவில் திரும்பப் பெறுவதற்குக் குறி யெதிர்ப்பை என்பது பெயர். இதனை, 'வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து-(221) என்னும் குறளால் அறியலாம். இந்தச் சொல் சேலம் மாவட்டம் போன்ற சில பகுதிகளில் அன்றாட வழக்கா யுள்ளது. அகழ்தல் என்பதற்குத் தோண்டுதல் என்பது பொருள். - 'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை’-(151) என்னும் குறளால் இதனை அறியலாம். இது, தஞ்சை மாவட்டம் போன்ற சில பகுதிகளில் அன்றாட வழக்கா