உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

பொது வினைமுற்றுச் சான்று:

மலையாளத்திலிருந்து தமிழ் பிறந்தது என்பதற்குக் குறிப்பிடப்படும் பெரிய சான்று எது என்றும் பார்த்து விடுவோமே.

தமிழில் உள்ள நடந்தான், நடந்தாள், நடந்தார், நடந்தது, நடந்தன, நடந்தேன், நடந்தோம் என்பன வற்றையெல்லாம் குறிக்க மலையாளத்தில் ‘நடன்னு’ என்னும் ஒரே சொல் உள்ளது. வளர்ந்தான், வளர்ந்தாள், வளர்ந்தார், வளர்ந்தது, வளர்ந்தன, வளர்ந்தேன், வளர்ந்தோம் எனத்தமிழில் உள்ளனவற்றை யெல்லாம். குறிக்க 'வளர்ன்னு' என்னும் ஒரே மலையாளச்சொல் உள்ளது. இது இறந்த கால வினை முற்று-தமிழில் உள்ள ‘செய்து’ என்னும் வினையெச்ச வாய்பாடு போல் மலையாள இறந்த கால வினைமுற்று இருக்கும்; இதன் இறுதியில் ‘உ’ முடிந்திருக்கும்.

தமிழில் உள்ள நடக்கிறான், நடக்கிறாள், நடக்கிறார், நடக்கிறது, நடக்கின்றன, நடக்கிறேன், நடக்கிறோம்-என்பன வற்றை யெல்லாம் குறிக்க மலையாளத்தில் ‘நடக்குன்னு’ என்னும் ஒரே சொல் உள்ளது. வளர்கிறான், வளர்கிறாள், வளர்கிறார், வளர்கிறது, வளர்கின்றன, வளர்கிறேன், வளர்கிறோம் எனத் தமிழில் உள்ளன வற்றை யெல்லாம் குறிக்க, மலையாளத்தில் ‘வளருன்னு’ என்னும் ஒரே சொல் உள்ளது. இது நிகழ்கால வினை முற்று. இதன் இறுதியில் உன்னு' என்பது முடிந்திருக்கும்.

தமிழில் உள்ள நடப்பான், நடப்பாள், நடப்பார், நடக்கும், நடப்பேன், நடப்போம்-என்பனவற்றையெல்லாம் குறிக்க, மலையாளத்தில் ‘நடக்கும்’ என்னும் ஒரே சொல்