உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 குடும்ப மொழியிலிருந்துதான் தமிழ் மொழி தோன்றிற்று என்று யாராவது சொல்லக் கூடுமோ? செய்யும் வாய்பாடு: பேச்சு வழக்கில் என்றென்ன. தமிழில் (எழுத்து வழக்கில்) இலக்கிய வழக்கில் கூட இவ்வாறு ஒரு வகைப் பொதுமை உண்டு. அவன் செய்யும், அவள் செய்யும், அது செய்யும், அவை செய்யும் எனச் செய்யும் என்பதே ஆண்பால்-பெண்பால், ஒருமை-பன்மை ஆகியவற்றிற்குப் பொதுவாய் வழங்கப்படுகிறது. அதாவது, பலர்பால் படர்க்கை, தன்மை, முன்னிலை ஆகியவை தவிரப் படர்க் கையில் மற்றவற்றிற்கெல்லாம் பொதுவாய் வரும். இத் தகைய வினை முற்றுகள் உம் விகுதியில் முடியும். 'உம்' விகுதியில் முடியும் இத்தகைய வினை முற்றுகளை இலக் கனத்தில் செய்யும்’ என்னும் வாய்பாட்டு வினைமுற்று என்பர். இதற்கு இலக்கணத்திலும் உரிமம் (லைசென்சு) தரப்பட்டுள்ளது-: ' பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை அவ்வயின் மூன்றும் நிகழும் காலத்துச் செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா” என்பது தொல்காப்பிய நூற்பா(277). ' பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில் செல்லா தாகும் செய்யும் என் முற்றே” இது நன்னூல் நூற்பா (346). அதாவது, பலர்பால் படர்க்கை, தன்மை, முன்னிலை ஆகியவை தவிர்த்த மற்ற இடங்களில் 'உம்' விகுதியில் முடியும் செய்யும் என்னும் வாய்பாட்டு வினை முற்று டொதுமையாய் வரும் என்பது இவற்றின் கருத்து. -