பக்கம்:தொழில் வளம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்சாரமும் தொழில்வளமும்

257



நபர்கள் ஆங்காங்கே இணைந்து தத்தம் தேவைக்கு ஏற்ற மின்சாரசக்தியைத் தனி ஆக்கத்திட்டங்களின் வழி உண்டாக்கிப் பெருக்கிக் கொள்ளலாம் என்றும் அதற்கேற்ற வகையில் அரசாங்கம் ஆவனவற்றைச் செய்யத் தயங்காது என்றும் அறிக்கை வந்தது என அறிகிறோம். அதுவும் ஒருவகையில் மின்சாரத்தை வளர்த்து அதன் வழியில் தொழில் வளத்தைப் பெருக்கச் சிறந்த செயல் சாதனமாகும் என்பது தெளிவு. எப்படியாயினும் தேவைக்குப் பின்னடையாது செயலாற்றி வெற்றி கண்டு தமிழ் நாட்டைத் தொழில் வளம் பெற்ற பொன்னாடாகச் செய்ய வேண்டுவது தமிழர் ஒவ்வொருவருடைய கடமையுமாகுமெனக் கூறி அமைகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/260&oldid=1382044" இலிருந்து மீள்விக்கப்பட்டது