பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நபிகள் நாயகம் வழியில் இபுராகிமிற்கும் அவரது குழுவினருக்கும் இறைவன் சிறந்த வெற்றியை வழங்கிப் பயணம் எளிதாக அமைய அருள்புரியுமாறு இருகரம் ஏந்தி இறைவனிடம் பிரார்த்தித்தார். அடுத்து பலநூறு பேர்களது குரல்கள் அல்லாஹ அக்பர் முழக்கத்துடன் ஒலித்தன. அல்லாஹ அக்பர் என்ற அந்த முழக்கம் ஜித்தா துறைமுகம் முழுவதும் எதிரொலித்தது. சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களது தோழர்களும் அவர்களுக்குரிய தோணிகளில் போய் அமர்ந்தவுடன் அந்தக் கப்பல்களின் பாய்மரங்களில் பிணைக்கப்பட்டிருந்த அகன்ற பெரிய பாய்கள் உயர்த்திப் பிணைத்துக் கட்டப்பட்டவுடன் தோணிகள் தென்மேற்குப் பருவக் காற்றின் விசையினால் விடுபட்ட அம்பு போல தெற்கு நோக்கிப் புறப்பட்டன. கார் காலத்தில் கொழுத்த மீன்களைப் பிடித்து தின்பதற்காகப் புறப்படும் நாரைக் கூட்டம் போல அந்தத் தோணிகள் வரிசையாக அணிவகுத்துச் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஏறத்தாழ ஒரு மாத காலம் கடல் பயணத்தில் கழித்த தொண்டர்களுக்கு இரவும் பகலும் கடலையும் ஆகாயத்தையுமே காணக் கூடியவர்களாக இருந்தவர்களுக்கு அன்று காலையில் எதிரே இந்திய நாட்டின் மேற்குக் கரையான கொங்கணக் கரை கண்களில் தென்பட்டது. அளவில்லா மகிழ்ச்சியை அளித்தது. பசுமை போர்த்திய குன்றுகள், அவைகளையொற்றி வளர்ந்து நிற்கும் செழிப்பான மரங்கள், மீனவர்களது குடியிருப்புகள் இவைகளை எல்லாம் கடந்து LD ITGW) ED நேரத்தில் அந்தக் குழுவினர் மேற்குக் கரையின் முக்கிய துறைமுகமான கண்னுர் துறையை அடைந்தனர். விண்ணை மறைத்து வளர்ந்து வரிசையாக நிற்கும் தென்னை மரங்கள் அந்தக் குழுவினருக்கு வரவேற்பு நல்குவதைப் போல மாலைக் காற்றில் அசைந்து காணப்பட்டன. கண்ணுர் என்று வழங்கப்பட்ட அந்த அழகிய கண்ணனுர் துறைமுகத்தில் கரையிறங்கிய சுல்த்தான் செய்யது இபுராகிம்