உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இந்த ஆருயிர் மருந்து இறையடியார்களுக்கு வழங்கப்பட அணியமாக உள்ளது. கரடுமுரடான பாதைகளுடே தடையின்றி ஊடுருவி மேலுலகம் வரை செல்கிறது. (இருக் 9)

உயர்ந்த எண்ணம் கொண்டவர்களை அடைந்து அவர்களுக்கு வாழ்த்து வழங்குகிறது. நேர்மையான எண்ணங்களுக்கும் செய்கைகளுக்கும் உரமளிக்கிறது.

உலக நன்மைக்காகத் தெய்வீக அறிவைக் காத்துப் பகிர்ந்தளிக்கிறது. (இருக் 9)

நற்றமிழில் நால் வேதம்