உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

எங்கள் ஆன்மாவுடன் சேர்ந்து தொலைவிலிருக்கும் நாங்கள் புகழ், அறிவுக் கூர்மை, அச்சமின்மை ஆகிய தன்மைகளை உன்னிடம் வேண்டி நிற்கிறோம். கெட்ட எண்ணங்களிலிருந்து மீளும் நோக்குடன். முன்னேற்றம், சீரிய தன்மைகளைக் குறிக்கோளாக முன்வைக்கப்பட்டு நமது வல்லமை வெளிப்படட்டும்.

(இருக் 1)

தேவியின் கடைக்கண் அருள்பெற, அத்தனை உயிரினங்களும் காத்து நிற்கின்றன. உன்மனம் ஒளிபெறும்போது, தெய்வீக ஒளி எதிரிகளைத் தொலைவிலேயே தடுத்து நிறுத்திவிடுகிறது.

(இருக் 1) இறைவன் அருள்பெற்ற ஆன்மாவே, தீயவர்களையும் தீய எண்ணங்களையும் உனது கூரிய நுண்ணறிவு பலத்தினால் தனித்திருந்தே வெற்றி கொள்கிறாய். அவற்றினிடத்தில் உயர்ந்த மதிப்பிற்குரிய நல்லவர்களையும், நல்ல எண்ணங்களையும் இடம்பெறச் செய்கிறாய். எளிமையான உயர்ந்த நோக்கங்களின் துணைகொண்டு உனது வலிமையினால் நிலையற்ற புல்லறிவுக் கோட்டைகளைத் தகர்த்தெரிகிறாய். (இருக் 1)

அருள்பெற்ற ஆன்மாவே, வழி தவறும் புலன்களை } உன் ஆற்றலினால் வென்று,

அவற்றை நெறிப்படுத்தி உன் ஆளுமையை நிலை நிறுத்துகிறாய். அசைக்கமுடியாத உன் உறுதியுடன் அறம்

நற்றமிழில் நால் வேதம்