பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t

உலகண்னலின் சிறப்பில் முக்கால் பங்கு உள்ளடங்கியே நிற்கிறது - கால் பங்கே மாறி மாறி வெளிப்படுகிறது. வெவ்வேறு நிலைகளில் இது உயிருள்ள இயங்குதிணைகள், உயிரற்ற இயங்காப் பொருள்கள் இவற்றில் ஊடுருவிச் செயல்படுகிறது. (இருக் 10)

உலகத்தலைவனின் தெய்வீக ஆற்றல் மூலம் குறையாத ஆற்றலுடன் இயங்கவல்ல உலகம் தோன்றியது உலகம் உருவாகிக் கொண்டிருக்கும நிலையில் நிலவுலகும், அது போன்ற வாழத்தக்க வேறு கோள்களும் தோற்றம் கொண்டன். உயிரினங்களில் ஆன்மாக்கள் தாங்கள் இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டன; உயிர்த் தன்மை தோன்றியது. (இருக் 10)

ஆற்றல் மிகு உலகம் தோன்றியதுமே ஆதியில் தோன்றிய பொருள் சூழ்நிலைக் கேற்ப மாற்றம் கொண்டு செயல்படலாயிற்று. அணுக்களின் கலவையில் மாற்றங்கள் எற்பட்டன, மேலான இந்த நிலவுலக மாற்றத்தில் உயிரைக் காக்க வல்ல ஆற்றல்கள் உண்டாயின. கூடவே, பசுமை, நெல்வகைகள்,பழவகைகள், மலர்கள் வலுசேர்க்கும், வாழ்நாளை நீட்டிக்க வல்ல மருத்துவப்பொருள்களும் தோன்றின. விலங்கினம் வளரவும் இதன்மூலம் வழி வகையாயின. (இருக் 10)

நற்றமிழில் நால் வேதம்