பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17O

செல்லும் பாதைக்கு ஒளியூட்டுகின்றன.

மாணாக்கன் தனது எளிய வாழ்க்கை முறை, கல்வி, கடும் உழைப்பு ஆகியவற்றின் துணை கொண்டு நானில ஆற்றல்கள், மற்றும் பிறருக்குப் பணிவிடை செய்கிறான், மரியாதை காட்டுகிறான். (அதர் 11)

திடமான உள்ளத்தின் மூலம் ஆற்றலைத் தேடுபவன் புனிதமடைகிறான். - புனிதம் அடக்கத்தை அளிக்கிறது. அடக்கம் பெருமதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுத் தருகிறது. நம்பிக்கை மூலம் கிடைப்பதுதான் மெய்மையை அறிதல், உண்மையை அடைவதற்கான வழி இதுதான்.

(யசுர் 19)

எல்லாவற்றையும் உண்டு முடிப்பது எது? உண்டு முடித்தது அத்தனையையும் உமிழ்ந்து காட்டுவது எது? அதன் வழியை விரைவாகக் கடந்து செல்பவன் யார்? ஊர்ந்து சென்று அந்த வழியைக் கடந்து செல்வது எவர்? தேவனே, எனக்கு விடை கூறுவாய். (யசுர் 23)

முடிவு நெருங்கிய காலத்தில் இயற்கை ஆற்றல் உலகை விழுங்கி விடுகிறது. படைப்பின் தொடக்க வேளையில் இயற்கை ஆற்றல் உலகை உமிழ்ந்து விடுகிறது. பின்னர் உலகை மறுபடியும் படைக்கிறது.

நற்றமிழில் நால் வேதம்