உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

வேட்கை

அளவற்ற செல்வம் மனிதனை பேராசைக்கு இட்டுச் செல்கிறது; இறுதியில் புலனின்பங்ளுக்கு அடிமையாக்குகிறது; உள்ளொளியை அழித்துப் புறச்சிந்தனையாளனாக மனிதனை மாற்றிவிடுகிறது. நிறைவேறாத ஆசைகள் துயரத்திற்கு வழிவகுக்கின்றன. ஆசைகள் நிறைவேறி விட்டால் பேராசை தலை தூக்குகிறது. ஆழம் காணமுடியாத கடல்போல் செல்வம் குவிந்திருக்கும் போதும் மனிதன் தண்ணீருக்குத் தவிக்கிறான். செல்வமாகிற கொந்தளிக்கும் அலைகள் மாந்தனைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு அவனது உணர்வுகளை அழுத்துகின்றன. அவன் தன் ஆன்ம வேட்கையைத் தணித்துக் கொள்ள முடிவதில்லை. அமைதியாகிற நீரைத்தேடி அலைகிறான்.

நற்றமிழில் நால் வேதம் سسة

k