உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

际学k 2O2 f

திருமணமும் இல்லறமும்

என்றும் நாம் ஒருவரையொருவர் அன்புடனும், பற்றார்வத்துடனும் பார்ப்போமாக. வன்மம் பாராட்டாமல் நாம் நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வோம். நம் இருவரின் நெஞ்சத்திலும் ஒரே உள்ளுயிர் வாசம் செய்யட்டும். (அதர் 7)

இணையர்களே, மணவாழ்க்கையின் இன்பங்களை நுகர்ந்துக் கொண்டு, நெடுங்காலம் வாழ்வீர்களாக, என்றும் ஒருவரை விட்டு மற்றவர் பிரியாதிருப்பீராக. உங்கள் வீட்டில் உங்கள் குழந்தைகளுடனும், பேரக் குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாய் இருப்பீர்களாக (அதர் 14)

கணவன், மனைவியரே, ஒருவரையொருவர் ஒத்திணைந்து கொண்டு அன்புடன் இருப்பீர்களாக.

நற்றமிழில் நால் வேதம்