உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 O

அமைதியான திடநம்பிக்கை

எல்லா வல்லமையும் படைத்த இறையே, - என் நெஞ்சமாகிற தனி அறையில் நீ துயில் கொண்டுள்ளாய். எனது உணர்புலன்கள் உனது பேருலக மாயமந்திரத்தால் உரம் பெறுகின்றன. உனது கைகளில் எனது எண்ணங்கள், செயல்கள் யாவற்றையும் அளிக்கிறேன். எனது ஆன்மாவில் உறையும் மேன்மை ஒளியினால் வாழ்த்தப்பட்டு, வாழ்க்கையில் எதிர்ப்படும் துன்பங்களை எதிர்கொள்ள, - நான் தூய்மையை, ஆற்றலைப் பெறுகிறேன். நீ என்னுடன் இருக்கிறாய் என்ற நினைப்பே ஓர் அரணாக இருந்து அமைதியான திட நம்பிக்கையுடன் எல்லாத் துயரங்களையும் தாங்கிக் கொள்ளும் - வலிமையை எனக்களிக்கிறது. (இருக் 10)

SYKD

நற்றமிழில் நால் வேதம்