உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

தாராள மனப்பான்மை

இறையனின் கருவியாக நாம் செயல்பட்டுச் செல்வத்தை எளியவர்களுக்கும், தேவைப்படுவோருக்கும் பகிர்ந்து வழங்குவோம். (இருக் 1)

நேர்மையாகச் சம்பாதித்து, தாராளமாக வழங்குபவர்கள் உலகில் நிலையான இடம் பெறுவர். சமூகத்தில் மரியாதை பெறுவர். தங்கள் செயல்பாடுகாளை அவர்கள் இறைவனுக்கு அர்ப்பணிக்கட்டும். (இருக் 1)

தாராளமாக அளிப்பவர் தெய்வீகத் தரத்திற்கு உயர்வர், தெய்வீகச் சக்திகளைப் பெறுவர். (இருக் 1)

வாரி வழங்குபவர்களுக்கு - இந்த வியப்புக்குரிய பரிசுகள் காத்திருக்கின்றன. அழியா வாழ்வை அவர்கள் அடைவார்கள். நீண்ட, புகழ்பெறும் வாழ்வை இறை அவர்களுக்கு அருளும். (இருக் 1)

நற்றமிழில் நால் வேதம்