உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

214

ஒரு பொழுதும் சூதாடாதே. திருப்தியுடனிரு. உண்மையான உழைப்பின் பலனை நுகர். வேளாண்மை செய், நன்கு அறுவடை செய். இவ்வாறு சேர்க்கும் செல்வமே உண்மையான மகிழ்ச்சியளிக்கும். இறைவன் வகுத்த புனிதமான அறம் இதுதான்.

(இருக் 10)

பட்டினியால் வருந்தும் தன் உடன்பிறந்தானுடன் உணவைப் பங்கிட்டுக் கொள்ளாமல் தான் மட்டும் உண்டு களிக்கும் தன்னலமி நண்பனாக இருக்கத் தகுதியற்றவனாகிறான். (இருக் 10)

செல்வனாயிருக்கும் பேறு பெற்றவன், எளியவர்களின் தேவைகளை நிறைவு செய்யட்டும். - வாழ்க்கையில் நீண்ட பாதையின்மேல் அவன் பார்வை விழட்டும், செல்வமாகிற தேருருளைகள் சுழன்று கொண்டேயிருக்கும். இன்று ஒருவனுக்குச் செல்வம் வந்து குவியும். அடுத்த நாள் இன்னொருவனிடம் செல்வம் சேரும். என்றாவது ஒரு நாள் மற்றவனுடைய உதவி தேவைப்படும் என்பதை ஒவ்வொருவனும் உணரட்டும். (இருக் 10)

தீயவழியில் சேர்ந்த செல்வம் அழிந்து போகும் என்பதே இயற்கை அறம். நேர்மையாகச் சேர்த்த செல்வம் நிலைத்துப் பெருகிடும்.

நற்றமிழில் நால் வேதம்