உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t

218

அரசுரிமை

ஓ, மன்னவ, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவன் நீ. மக்களின் ஒரே தலைவனாகயிருந்து ஒளி விளக்காய் மேன்மையுடன் ஆட்சி செய்திடுவாய். மக்கள் யாவரும் உனக்கு தலை வணங்குகிறார்கள். வானவர்கள் உன்னை வாழ்த்துகிறார்கள், அறந் தவறாமல் நடந்து கொள். இரக்கமுள்ளவனாக இருந்திடு. மக்களுக்குப் பொருளுதவி செய்திடு. நீ செய்யும் வள்ளன்மை வழிகள் எல்லாம் உனக்குப் பெயரும், புகழும் பெற்றுத் தரும். வலிமை பொருந்திய, பரிவிரக்க முள்ளவனாக நீ நூறாண்டு வாழ்ந்திடு. நீ, தவறாமல் அதே வேளையில் உறுதியுடன் நடந்திடு. உன் புகழில் எல்லோருக்கும் பங்களி. (அதர் 3)

கடவுளே, எங்கள் யாவருடைய தலைவனாகவும், மக்களுடைய அரசனாகவும் விளங்குகிறவனை

நற்றமிழில் நால் வேதம்