உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229

உயர்ந்த சிந்தனைகளும், சிறந்த செயல்களும்

போதும் என்கிற நிறைவான மன நிலையை நீ அடைய வேண்டுமானால் இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்திடு. கூடவே சமுதாயம் பயனடையும் வகையில் முழு முயற்சிகளையும் செய்வாயாக. (இருக் 1)

உண்மையாகவும், பொறுமையாகவும் எவனொருவன் உழைக்கிறானோ, அவன்தான் விரும்புவதைக் கட்டாயம் அடைந்தே தீர்கிறான். (இருக் 1)

பொறுமையான தேடுதல், உள்ளொளி தேடிய அறிவின் வழி நடத்தல் ஆகியவற்றின் மூலம் கூரறிவுடைய மாந்தர்கள் தங்களை அழிவினின்றும் காத்துக் கொள்கிறார்கள். (இருக் 1)

இறைவ, எங்கள் உள்ளங்களையும் மனங்களையும் அன்பு என்கிற தேனமுத ஊற்றினால் நிறைந்திடுவாய்.

(இருக் 9)

த.கோ - தி.பூதி