பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237 "z உன்னுள்ளே வாழும் எதிரிகளை வெற்றி கொள்ள

உதவிடும் மொழிகளையே கேட்பாய். (யசுர் 6) 鷲

J. வழி காட்டுதலைத் தேடி உன்னிடம் எல்லோரும் ६ வரும் அளவுக்குப் புகழ் பெற்றிடு. (யசுர் 6)

தன்னிறைவு உள்ளவன் நீ உனது விதியை நீயே

உறுதிப் படுத்துக் கொள்ளும் கலைஞன் நீ.

(யசுர் 7)

ஓ, நமது நாட்டின் தலைவர்களே, நமது தாய் நாட்டின் பாதுகாப்பின்மேல் மிகுந்த கவனமாயிருங்கள்.

(யசுர் 9)

நமது அறிவர்களின் அறிவாற்றல் உண்மையானது ,

பயனுள்ளது. முழு நம்பிக்கையுடன் அவர்களுடைய அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். (யசுர் 11)

ஓ. மாந்தனே, தன்னை நம்பியிருத்தல், ஈக மனப்பான்மை இவற்றின் சிறப்புகளைப் புரிந்து கொள்.

(யசுர் 23)

இறைவழிபாடு, நற்குணங்களை வளர்த்தல் இவற்றின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி நமக்கு நலம் தருகின்றது.

(சாம 194)

த.கோ - தி.பூரீ .تشس

4