உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

வாருங்கள், துணிவாக முன்னேறுங்கள். இடர்பாடுகளைத் துணிவுடன் எதிர் கொள்ளுங்கள். நீங்கள் நேர் வழியில் செல்லும்பொழுது, எந்த இடையூறுகளும் உங்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது. (இருக் 1)

போற்றத்தக்க அணைத்து வல்லமையுள்ள இறைவனே, எங்களுக்கு மெய்யறிவினை அளிப்பாய். கடுமையான உழைப்பில் மகிழ்ச்சியடையும், அது பயனளிக்கும் என்று நம்பிக்கை கொள்ளவும் செய்திடுவாய். - உனது வாழ்த்துகளினாலும், பாதுகாப்புடனும்தான் இவை கை கூடும். நீயே எங்களை வளர்ப்பவள், அனைத்தும் அளிப்பவன், கடினமாக உழைப்பவனுக்கு வழிகாட்டி, தனது உழைப்பின் பலன்களை நுகருமாறு அவனுக்கு அருள் புரிந்திடுவாய். (இருக் 1)

தளரா ஊக்க்த்துடன் உழைத்திடும் அன்பார்வலர்கள் நல்ல பலன் பெறுவர். (இருக் 1) தங்களுக்கு தாங்களே உதவிபுரிந்து கொண்டு இறை வழி காட்டுதலில் கடுமையாக உழைப்பவர்களுக்கே இறை உதவிபுரிகிறது. (இருக் 4)

சீரிய பணிகளுக்குத் தங்களை அளித்துக்

o கொண்டவர்கள், தங்கள் பணிவன்பையும் நன்மதிப்பையும் வையகக் கடவுட்தன்மை படைதோர்க்குச் செலுத்துகின்றனர்.

நற்றமிழில் நால் வேதம்