உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

தெய்வீக அன்பைப் பொழியும் வேய்ங்குழல்

தெய்வீகக் கவிஞனின் இன்னிசையைக் கேளுங்கள். அன்பின் ஆழத்தை குழல் மூலம் இசைக்கிறான் அவன், பாடலின் பண்ணொலிகள் விண்ணை எட்டுகின்றன. எட்ட முடியாத விண்மீன்களைத் தொடுகின்றன. கடலின் கொந்தளிக்கும் அலைகளின் மேல் களி நடனம் புரிகின்றன. நிலம், கடல், வான் யாவையும் இந்தத் தெய்வீக இசையின் இனிமையில் கட்டுண்டு கிடக்கின்றன. காலத்தின் தாழ்வாரத்தின் ஊடிே புகுந்து பரந்த விண்வெளியின் மேற்க்விகையில் அந்த இசையின் நுணுக்கமான அசைவுகள் எதிரொலிக்கின்றன.

(சாம 446)

தங்கத்தின் பளபளப்பும் இனிமையான குரலும் படைத்த புடவியின் அறிவின் ஒளி நமக்கு மகிழ்ச்சியூட்ட விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வருகிறது.

த.கோ - தி.யூரீ