உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259

வில்லிலிருந்து அம்பை எய்திடுவதுபோல்

உன் நெஞ்சத்திலிருந்து சீற்றத்தை அகற்றிவிடு.

இனி, நீங்கள் நண்பர்களாகி இணங்கி வாழ முடியும்.

(அதர் 6)

எழு ஞாயிறு மற்ற விண்கோள்களின் பேரொளியைப் பறித்து விடுவது போல், நான் கெடுமதி படைத்தவர்களின் பலத்தை உறுஞ்சி விடுவேன். கண்ணிமைக்கும் நேரத்தில் இருக்கிற இடம் தெரியாமல் அவர்கள் மறைந்து போவார்கள். (அதர் 7)

இறந்தவர்களைப் பற்றி வருந்திக் கொண்டே இருக்காதீர்கள். அத்தகைய சிந்தனை உன்னைப் பின்னுக்குத் தான் இழுத்துச் செல்லும். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வருவாய், புகழ் உனக்காகக் காத்திருக்கிறது. வாவா, நாங்கள் உன் கைகளைப் பற்றிக் கொள்கிறோம். (அதர் 8)

த.கோ - தி.பூரீ