உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

நீராட்டித்திற்குப் பின் ஒருவன் புத்துணர்வை - ப்போல் தன் உடல் புதுப்பொலிவு பெற்றிருப்பதைக் கண்டு அவன் நம் கண் முன்னே தோற்றமளிக்கிறான். இருண்மை நீக்கி, வெறுப்பை ஒதுக்கிக், காலைப்பொழுதில் அவன் துறக்கத்தின் புதல்வனாய். ஒளிமயமாய்க் காட்சியளிக்கிறான். (இருக்:5) சமூகத்தில் சிறந்த விண்ணகத்தின் புதல்வன் மகளிர் முன் தலை நிமிர்ந்து நிற்கிறான். தன்னைப் புகழ்பவனுக்கு வரங்கள் வழங்கி, என்றும் இளமையோடிருக்கும் காலைப்பொழுதின் ஒளியை.தன்னுடனே கொண்டு வருகிறான்.

..(இருக் 5)

ஒளி வீசும் காலைப் பொழுதின் வெள்ளை, இளஞ்சிவப்பு, வண்ண்ங்கள் கடலலைகள்போல உயர்கின்றன. எல்லா வழிகளையும் பயணம் செய்யத் தெளிவாக்குகிறான். அன்புள்ள, தோழமையுள்ள தன் சீர்த்தியை வெளிப்படுத்துகிறான். (இருக் 5)

தெய்வீகம் பொருந்திய காலைப் பொழுதே,

பறவைகள் கூட்டிலிருந்து வெளிக் கிளம்பி பறந்து

ல்லும் போது, மக்கள் வேலைக்குப் புறப்பட்டுச் செல்ல

வேண்டும்.

தங்கள் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை

நிறைவேற்றி கொள்ளவேண்டும். (இருக் 6)

நற்றமிழில் தால் வேதம்