பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

தெய்வீக நோக்குடைய அறிவாளிகள் ஏற்கெனவே உன்னைப் பாராட்டியுள்ளனர். உண்மையைத் தேடுபவர்களும் உன்னை புகழ்ந்து பேசட்டும். (இருக் 7)

நம்மை ஆளும் கடவுள், விண்ணில் விண்மீன் கூட்டங்களைப் படைத்தது. இரவில் தோன்றி பகலில் மறைபவை அவை. கடவுளின் ஆணைகள் என்றுமே மீற முடியாதவை. கடவுளுடைய கட்டளையை ஏற்று வெண்ணிலவு இரவில் ஒளி வெள்ளமாய் நகர்ந்து செல்கிறது.

                                               (இருக் 1)

தெய்வீக ஒளி வீசும் ஞாயிறு, சிறிய பெரிய விண்மீன்கள், காலங் காலமாக நிலைத்திருக்கும் அழிவற்ற அன்னையின் குழந்தைகள். அவை அப்பழுக்கற்றவை, ஒளி பொருந்தியவை. அவை எவரையும் கைவிடுவதில்லை, அவை எவராலும் குறை கூற முடியாதவை. தாக்க முடியாதவை. நமது புகழ்ச்சிகளால் அவை இன்று மகிழ்ச்சி அடையட்டும். (இருக் 2)

காட்டில் வாழும் மான்கள் இரண்டினைப்போலப் பசுமையான நிலங்களில் வசிக்கும் இரண்டு முரட்டுக் காளைகளைப் போல விண்ணில் பறந்து செல்லும் இரு அன்னங்களைப்போல, இரவு பகல் இரண்டுமே நமது உயர்ந்த செய்கைகளைப் போற்றிப் புகழட்டும். (இருக் 5)

த.கோ - தி.பூநீ