உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94

தாய் நிலம்

வாய்மை என்றும் நிலைத்திருக்கும் உயர்ந்த உறுதியான ஒழுங்குமுறை, தன்னளிப்பு, எளிமை, வழிபாடு, சமயத் தொடர்பான வினைப்பாடுகள் இவை யாவும் நிலத்தைத் தாங்கி நிறுத்துகின்றன. இது வரையும் இருந்த இனியும் இருக்கப் போகிற அவள் நமக்கு விரிந்த இடமளிக்கட்டும். (அதர் 12)

நானிலம் பற்பல ஏற்றங்கள், சரிவுகள், மனிதர்களை ஒன்றாக இணைக்கிற எல்லையற்ற சமவெளிப் பகுதிகள் கொண்டது. நோய்களைத் தீர்க்கும் மருத்துவப் பண்புள்ள செடிகள் பலவுண்டு அவற்றில், நமக்கு விரிந்த இடம் அவள் தருவாளாக,

(அதர் 12)

கடல், ஆறு, நீர், நிலைகள் நிலவுலகில் உள்ளன. உணவு, கூல வயல்கள் ஆகியவை

நற்றமிழில் நால் வேதம்