உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

தாய் நாடு

உன் நாட்டின் புகழுக்கும், வெவ்வேறு மொழிகள் பேசும் உன் நாட்டு மக்களின் புகழுக்கும் பாடுபடு. மக்களின் உள்ளக் கிடக்கைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் மதிப்பளி. அன்னை நிலத்திடம் உள்ள செல்வங்கள் எண்ணிலடங்கா. அவளிடமிருந்து நூற்றுக் கணக்கான நீரோடைகள் மூலம் செல்வம் புரண்டோடுகிறது. இறைவனைத் தொழுவதைப் போன்று தாய் நாட்டையும் தொழு. தொல்பழங்காலத்தொட்டு காலங் காலமாக நிலத்தாய் தன் குழந்தைகளுக்கு வாழ்வளிக்கின்றான். நீ அவளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறாய்.

(அதர் 12)

நற்றமிழில் நால் வேதம்