உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

k

3O

ஓ, இசைக் கலைஞனே, உன் கண்களைத் திறந்து பார். உனக்கெதிரே நிற்கும் என்னைக் காண். உலகில் சிறந்தவை, பெருமிதமானவை என்று கருதப்படும் எல்லாவற்றையும்

நான் விஞ்சி நிற்கிறேன். என்னைப் பற்றிய, உண்மையான - ஒளி எது என்பதை எடுத்துக் காட்டுபவன் நானே. எல்லா உலகிலும் நான் யாவராலும் போற்றப்படுகிறேன். அவர்கைைள நான் அக்கறையுடன் கவனித்துக் கொள்வேன். - (இருக் 8)

மனிதர்களுக்கு நான் நூறாண்டு வாழ்வை அளிக்கிறேன். தங்கள் உடலையும், உள்ளத்தையும் நலமுற வைத்துக் கொண்டு இந்த வாழ்க்கையை நுகரட்டும். என்று கடவுள் வாழ்த்துகிறார். (இருக் 10)

சீறியெழும் கொண்டல்களை மின்னல் தாக்கி வீழ்த்துவது போல், பிறர் உழைப்பைச் சுரண்டும் கொடியவர்களை - இடிபோன்று தாக்குபவன் நான். - பிறரின் இரத்தத்தை உறிஞ்சும் இரக்கமற்றவர்களை ஒள்ளிய வானத்தைத் தாண்டி அப்பால் விழுமாறு ஓங்கி வீசி எறிபவனும் நானே. (இருக் 10)

"பலம், செழுமை, ஆகிய அண்டத்தின் ஆற்றல்களை இயக்குபவன் நானே. ஒளிதரும் பொருள்கள் வானக ஆற்றல்கள் ஆகியவற்றின் மீதும் என் வல்லமை உள்ளது. ஞாயிறு, காற்று, நெருப்பு, மற்றும் மக்களுக்குதவும்

நற்றமிழில் நால் வேதம்