உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

நெருப்பு, செங்கதிர், காற்று, அல்லது தண்கதிர் எந்தப் பெயரில் வேண்டுமானாலும் அவன் அழைக்கப்பட்ட்டும். எல்லாமே அனைத்து வல்லமையுள்ள அவன்

ஒருவன்தான். + . . . . . . * - - அவன் தான் படைப்பவன், மக்கள் தலைவனும் அவனே. அகில உலக ஆண்டை அவன்; முடிவு காணமுடியாத ஆற்றல் உடையவன் அவன்; எல்லா உயிரையும் காப்பவன் அவனே. (யசுர்32)

என்றும் நிலைத்திருக்கும் புனித ஒளி ஒன்றே. அதுவே பல்வேறு வடிவங்களாக எழுச்சியுறுகிறது. ஞாயிறு ஒன்றே; நமக்கு வெதுவெதுப்பையும் உயிரையும் அளிப்பது அதுவே. அனைத்து உயிர்களிடையேயும் அதன் மிளிர்கிற வண்ணங்கள் புகுந்து ஒளிர்கின்றன. வையப்புடவி அனைத்திலேயும் அதன் உயிர்மூச்சை உணரலாம் - வைகறை ஒன்றே இதன் பளபளப்பாய் வகை வகையான வண்ணங்களாக உதிர்த்து உலகத்தின் - முகத்தை அழகு பெறச் செய்கிறது. (இருக் 8)

அந்த உண்மைக்குக் கற்றுணர்ந்த அறிவர்கள் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கிறார்கள். - ஒருவனுக்கே பல பெயரிடுகிறார்கள், இந்திரன், ஒளிமயமான முதல்வன், கண்காணிப்பாளன், நண்பன், நற்பண்பாளன் மழைஞன்(வருணன்) போற்றுதற்குரிய தீ, மேலுலகைச்

த.கோ - தி.பூரீ