பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.வே.சு. தமிழ் இலக்கியப்பணி 99. have been Confined for so many ages only to one single peeple even in Hindustan grard; G plágasi pri gшf youri கள். ஆம்! அவர் சிறந்த உள்ளம் எல்லாரும் குறளின்பத் தைப் பருகவேண்டும் என ஆசை கொண்டது. அதன் வழியான அழகான மொழிபெயர்ப்பு நூல் நமக்குக் கிடைத்தது. - மேலும் தம் முன்னுரையில் வள்ளுவர் வாழ்க்கையினை யும் மனைவியின் பண்பினையும் சுட்டி, அதன் வழி தமிழ்ச் சமுத்ாய இல்லறக் கற்பு நெறி இப்படிப்பட்டதெனத் தெளி. வாக்குகிறார். மேலும், தமக்குமுன் மொழி பெயர்க்கப்பெற்ற வற்றிலுள்ள குறைபாடுகளை நாகரிகமுறையில் சுட்டிக்காட்டி அதனாலேயே வள்ளுவர் உள்ளத்தைக் காட்டத் தாம் மொழி. பெயர்ப்பினைச் செய்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும் உரையாசிரியராகிய பரிமேலழகரைப் பாராட்டுவதோடு அவர் வள்ளுவர் கருத்துக்கு மாறுபட்ட இடங்களைச் சுட்டுவ தோடு அமையாது. தம் மொழி பெயர்ப்பில் அக்குறைகளை நிறைவு செய்கிறார். மக்கட் பேறு என்ற அதிகாரத் தலைப்பினை, பெண்களைத் தாழ்த்தும் வகையில் பரிமேலழகர் புதல்வரைப் பெறுதல்’ என்று மாற்றியதை மாற்றி OFF SPRING' என்றே அழகாக மொழி பெயர்க் கிறார் என்பது ஒரு சான்றாகும். ஐயர் அவர்கள் அதிகாரங்களின் தலைப்பினை மொழி பெயர்க்கும்போதும் அவை வைப்பு முறையினை விளக்கும் போதும் அதுவரையில் மற்றவர் காட்டாத வகையில் புதுப் புதுக் கருத்துக்களைப் பெய்து விளக்குகிறார். ஊழ் என்னும் அதிகாரத்தினை அறத்துப்பாலின் கடைசியில் வைத்தமைக்கு ஐயர் காட்டும் விளக்கம் (xxxi) சாலச்சிறந்ததாகும். குறளின் சிறப்பினை அவர் மொழிபெயர்ப்பாலேயே காணல் சிறந்த தாகும். இதோ அவர் வாக்கு :