பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கல்லவை ஆற்றுமின் பிற்காலத்தில் வேற்று நாட்டு அரசியல் படையெடுப்பு மட்டுமன்றி, சமய, சமுதாய நுழைவுகளாலும் வடக்கிருந்து வந்த வடமொழியாகிய சமஸ்கிருதம் தமிழ்மொழியில் புகுந்தது. எனினும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்று அவ்வடமொழி தமிழில் அதிகமாகக் கலக்கவில்லை. களப்பிரர் காலமாகிய 3-6ஆம் நூற்றாண்டிலும் பிற்காலச் சோழர் காலத்திலும் வடமொழி சமய, வாழ்வியல் வகை களில் அதிகமாகக் கலந்த போதிலும், அவை அடுத்தடுத்து ஒதுக்கப்பெற்றன. சென்ற நூற்றாண்டில் சமயம் வளர்க்க மேலை நாட்டிலி ருந்து வந்த கால்டுவெல் பெருமகனார் இத்திராவிட மொழி களை ஆராய்ந்து ஒப்பிலக்கண நூலை எழுதினார். அதில் பிற மொழிகள்-சிறப்பாக ஆரிய மொழி, திராவிட மொழிகளில் கலந்தமை காட்டி, தமிழ் தனித்தியங்கும் தன்மையினையும் offoréðussitatisff. “Dravidian languages independent of Sanskrit' (1956 eg. pg. 40-52) திராவிட மொழிகள் வடமொழி இன்றியே தனித்தியங்க வல்லன என்றே தனித் தலைப்பிட்டு, அவற்றை விளக்கிக் காட்டுவதோடு, தமிழ் வடமொழியின்றியே தனித்தியங்கிச் சிறப்புறும் எனத் திட்ட lorrāš & sough armit. ‘Tamil can readily dispense with the greater part-or the whole of the Sanskrit and by dispensing with it, rises to a pure & more refined style (p. 47). இது தனித்தமிழ் இயக்கத்துக்கு வித்து எனலாம். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலே தமிழ்நாட்டில் அரசியல் மறுமலர்ச்சி அடிப்படையில் ஓர் எழுச்சி அமைந்தது. தொடர்ந்து நீதிக்கட்சி ஆட்சியில் அமர்ந்தபோதும், பின் ஈ.வே. 'இராமசாமிப் பெரியார் போன்றார் சமுதாயப் புரட்சி கண்ட போதும் அவற்றின் வேகம் மொழியிலும் தாக்க ஆரம் பித்தது. அதுவே பின் தனித்தமிழ் இயக்கம் எனப் பெயர் பெற்றது. தத்தம் வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்