உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கல்லவை ஆற்றுமின் உரைநடை, கவிதை இலக்கியங்கள் ஒரளவு தனித்தமிழ் மரபைப் பின்பற்றுகின்றன. என்றாலும் முற்றும் இந்த இயக்கம் வெற்றி பெற்றது என்று சொல்ல இயலாது. அண்மையில் தமிழில் வடமொழி அன்றி ஆங்கிலத்தையும் கலந்து கதைகளும் பிறவும் எழுதப் பெறுகின்றன. அவற்றை வெளியிடும் பத்திரிகைகளே இலட்சக் கணக்கில் விற்பனையா கின்றன, அறிஞர்களும் அதுபற்றிக் கவலைப்படுவதில்லை. கவிஞர்களும் புதுக்கவிதை அமைப்பதில் எத்தனையோ வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். தமிழ் வளர்க்கும் அரசாங்க அறிக்கைகளும் தனித் தமிழில் இல்லை. எனவே இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலே வீறுற்றுப் பரவிய இந்தத் 'தனித்தமிழ் இயக்கம் இந்த நூற்றாண்டின் இறுதியிலே மற்றொரு இருண்ட கால நிலையினை எய்துமோ என்ற அச்சம் உண்டாகிறது. ஆயினும் கால்டுவெல்லும் பிற அறிஞர்களும் காட்டியபடி, தமிழ் என்றும் தன் தனித்தன்மை கெடாது விளங்கும் என்பது உறுதி. புரட்சிக் கவிஞருடன் நான் கான் அன்று (1926) வாலாஜாபாத் இந்து மத பாட சாலையில் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆண்டில்தான் காஞ்சியில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதில்தான் பெரியார் காங்கிரசினை விட்டு விலகி, தமிழர் களுக்குத் தனிக் கட்சி தொடங்க எண்ணினார். அந்தக் காஞ்சி மாநாட்டுக்கு வந்த மூவரை-வரதராசலு நாயுடு, பெரியார், திரு.வி.க-பள்ளிக்கு அழைத்து வந்து விழா நடத்தினர் நிறுவனர் வா.தி.மா. அவர்கள்-சாதி ஒற்றுமையா அன்றிச் சாதி வேற்றுமையா' என்ற சொற்போரில் நான் சாதி