பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக் கவிஞருடன் நான் 109 உண்டு. அதன் வழி இப்புரட்சிக் கவிஞர் வாக்கு, புவியில்நாட்டில் மெய்யாகும் நாள் வருமோ என அஞ்ச வேண்டி யுள்ளது. - கவிஞர் தம் தமிழ் நலம் காட்டும் பாடல்களையும் பிற, வற்றையும் அவற்றில் வரும் உவமை நலம் போன்றவற்றையும் பலப்பல அறிஞர்கள் நன்கு காட்டுகிறார்கள்-கண் உள்ளவர் காண்கிறார்கள் எனக்கு மனத்தில் பட்ட ஒரு நல்ல உவமை 'சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் வரும் ஒன்றாகும். பிற வெல்லாம் சிறந்தவையே. நான் இங்கே எடுத்துக்காட்டாக ஒன்றையே காட்டுகிறேன். அப்பெருமலையை ஆடாது அசையாது சிதறாது சிறுமை உறாது கொண்டு வைத்தற்கு உவமையாக 'கண்ணாடிப் பாத்திரத்தைக் கல் தரையில் வ்ைப்பது போல்’ என்று காட்டியது. அந்தப் பகுதி தான் ஆச்சரிய மாகு மடி’ என்ற படி எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இப்படி எத்தனை எத்தனையோ காணலாம். பலர் அன்று தொட்டுக் காட்டிக் கொண்டே உள்ளனர். இந்த ஆண்டில் அவர் தம் நூற்றாண்டு விழா நடைபெறு கிறது. நான் எதிலும் ஒதுங்கி நிற்பது போல் இதிலும், ஒதுங்கியே நிற்கிறேன். எனினும் அன்பர் வேண்டுகோளின் படி இக்கட்டுரை எழுதி முடிக்கின்றேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் தமிழ் உள்ளளவும் வளரும் என்பது உறுதி. தமிழ் வாழ-அதன் வழியே கவிஞர் வாழ நாம் வாழ்த்துவோமாக!