உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 நல்லவை ஆற்றுமின் மக்கள் முற்றும் உழைத்து, உற்ற நெறியில் செயலாற்றாது, சோம்பியிருப்பதேயாகும். வாழும் மளிதன் கடமையை மறந்து, உரிமை ஒன்றையே பற்றிச் செயலாற்ற, தான் பிறந்தபயன் மற்றவர்களுக்குப் பாடுபடுவதே என்ற உண்மையை மறக்கிறான்; மயங்குகிறான். தான் சமுதாயத்துக்காக என்ற உண்மையை மறந்து சமுதாயமே தனக்குக் கடமைப்பட்டது எனக் கருதுகிறான். இந்த நிலையில் அவன் நல்லவனாக மட்டுமன்றி வல்லவனாகவும் வாழவழியில்லை. இதனாலேயே வளமிருந்தும் வாட வேண்டிய நிலை நாட்டில் உள்ளது. ஒளவையார் இந்த உண்மையினை உணர்ந்தே, "எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே' என நிலத்தை வாழ்த்துகிறார். இங்கே ஆடவர் என்பது பெண்டிரையும் குறிக்கும். ஆம்! மக்கள் எவ்வழி நல்லவர்களாகிச் செயலாற்றுகிறார்களோ, அந்த நிலையில் அவர்தம் உழைப்பாலும் உற்றபிற செயல்களாலும் நாடு நாடாகும். எனவே அனைவரும் ஒன்றுகூடி உழைத்து-ஒயாது உழைத்து- நாட்டை எல்லா வகையிலும் உயர்த்தப் பாடுபட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டு சங்ககால ஒளவையாராம் அச்சான்றோரின் வாக்கினை உங்கள் முன் வைக்கிறேன். 'நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய கிலனே' நாட்டிற்கு அறிமுகமான இதிகாசங்கள் இரண்டு. ஒன்று பாரதம். மற்றொன்று இராமாயணம். ஒன்றில் பாண்டவரும் கெளரவரும் விரோதிகள் எனவும் மற்றொன்றில் இராமனும் இராவணனும் விரோதிகளெனவும் காண்கின்றோம். ஆயினும் சற்று ஆழ்ந்து நோக்கினால் இப்புறப் பணிகளைக் காட்டிலும் உட்பகையே ஆட்சி செலுத்துவதை அறிய முடிகின்றது.