பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டு கலம் 117 ஒவ்வொரு தனி மனிதனும் உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற வாக்கின் படி, உட்பகை கடிந்து, உலகம் வாழ உயர்ந்த எண்ணங்களை எண்ணி அவற்றின் வழிச் செயலாற்று வானாயின் அன்று நாடு நாடாகும். நாம் மனிதராவோம். அந்த நன்னாள்-நாட்டிலும் தனி மனித வாழ்விலும், உட் பகை நீங்கி உயர்வுள்ளம் அரும்பும் நாள்-விரைவில் மலர் வதாக என வாழ்த்தி அமைகின்றேன். உலகம் தோன்றிய நாள் தொட்டு நல்லனவும் அல்லனவும் இயங்கி வருகின்றன. உயிரினத் தோற்ற முதலே அதன் உணர்வில் இரண்டும் இயங்குகின்றன. உயிரினத்தின் உச்சியில் உள்ள மனிதன் பகுத்தறிவு பெற்றவன் எனப்படு கிறான். அவனிடமும் இவை இரண்டும் குடி கொண் டுள்ளன. நல்லதன் நலனும் தீயதன் தீமையும் ஆய்ந் துணர்ந்து, அல்லதை நீக்கி நல்லதைக் கொள்ளவே அவன் பகுத்தறிவு வழிகாட்ட வேண்டும். ஆனால் உலக வரலாறு அவ்வாறு இல்லையே! மனிதன் மனிதனாக வாழ வேண்டுமாயின் அறிவொடு கூடிய சான்றான்மை பெற்றவனாக வேண்டும். பிற உயிர் களைத் தம் உயிர்போல் ஒத்து நோக்கி வாழப் பழக வேண்டும். இறை உணர்வும் உயிர்களிடத்து அன்பும் உடைமையே மனித வாழ்வாகும். 'அன்பின் வழியது உயிர் நிலை என்று வள்ளுவர் இதை எல்லா உயிர்களுக்குமே ஏற்றிக் காட்டுவர். ஆம்! அந்த அன்பும் அருளும் அறிவும் சான்றாண்மையும் ஒன்று கூடின் மனிதன் தெய்வமாக மதிக்கப் பெறுவான். அப்போது அவன் செயல் யாவும் பிற உயிர்களுக்கு, தீங்கிழைக்கும்-ஊறு செய்யும் உயிர் களுக்கும்-மற்றவர்களுக்கும், நல்லனவாகவே அமையும் என்பது உறுதி. உலகம் உய்ய வேண்டுமாயின் இந்த உயரிய குணநலம் இன்றியமையாதது. இந்த உயரிய பண்பினை மறந்த