பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நல்லவை ஆற்றுமின் மணச் சடங்குகள் அனைத்தையும் நடத்திப் பிறகு பிணச் செயல் மேற்கொள்வார்களாம். 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற வள்ளுவர் கொள்கை அங்கே சிறப் பதைக் கண்டேன். பெண்கள் வயது வந்த பிறகே மணம் செய்வர். சில மரபில் பெண் தாய் மாமனுக்கே உரியவள் என்றும் இளவயதிலேயே அவனுக்கு நிச்சயம் செய்யப்பெற வேண்டுமென்றும் அவன் விரும்பாமல் அப்பெண்ணை யாருக்கும் மணமுடிக்கக் கூடாது என்றும் நம்புகின்றனர். அத்தகைய பிறருக்கு உரிய மணத்தையும் அத்தாய் மாமனே முன்னின்று நடத்த வேண்டும். வயது வந்த பெண்களுக்கு உரிய சடங்குகளையும் தாய்மாமனே முன்னின்று நடத்த வேண்டும். குடும்ப உறவின் சிறப்பு இது. குழந்தை பிறந்தால் தாயும் சேயும் தனி இடத்திலே விடப்பெறுவர். சிலர் ஏழு மாதங்கள் வரை தாய் குழந்தை இருவரும் தனியாகவே இருக்க வழி செய்வர். அடிக்கடி கருதி தரிப்பதைத் தடுக்கத் தாமே ஏற்படுத்திய குடும்பக் கட்டுப் பாடு இது போலும். இவர்கள் குருவினைத் தெய்வத்துக்கு ஒப்பாகப்போற்றுவர்-குரு இவர்கள் குலத்து முன்னோரே. தமிழில் மாடு' என்றால் செல்வம் என்று பொருள் அல்லவா! இப்பொருள் இந்த நாடோடி மக்களால் (Tribel People) நன்குபோற்றப் பெறுகின்றது, உதகைத் தோதவருக்கு எருமைதான் முக்கியம்-அதைத் தெய்வமாகப் போற்றுவர், விளக்கேற்றுவது முதல் யாவற்றிற்கும் எருமை நெய்யே பயன்படும். அப்படியே கோதவருக்குப் பசுக்கள் தான் முக்கியம். அப்படியே மஞ்சுமலைக் குறும்பருக்கு ஆடு தான் முக்கியம். இவர்கள் செல்வ வளம் பெற்றவர்கள். எனவே ஆட்டுப்பால் நெய் முதலியவற்றை விலைக்குத் தர மாட்டார்கள். இனாமாக வழங்குவார்கள். இறைச்சிக்காக ஆடுகளை விற்க மாட்டார்கள். ஆடுகளுக்கு நோய் வந்தால்