உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங்குடிப் பண்பாடு 133 மூன்றுள்ள அவனிடத்தில் உள்ள ஆணவம் சாக வேண்டும்’ என்பதன் கருக்கமே அது என்றனர். இது கேட்ட நான் எல்லாச் சமய உண்மைகளும் வள்ளுவர் விளக்கமும் இச்சிறு சொல்லில் அடங்கிய பெருமையினையும் அதை உபயோகிக்கும் அக்கல்லா மாக்களின் உயர்வினையும் எண்ணி எண்ணி உருகினேன். இவர்கள் வழக்கத்தில் உள்ள சில சொற்கள் இவர்தம் மரியாதை உணர்வை நமக்கு உணர்த்துவனவாம். (பெரும் பாலும் முன்னிலை வினையை வியங்கோளாகவே இவர்கள் ஆளுகின்றனர். காணிய, ஊட்டமாடிய தரக்கொளிய போன்ற சொற்களையும் அவற்றில் அமைந்த பொருள் நலன் களையும் சொல்லினிமையினையும் எண்ணிப் போற்றினேன்.) பண்டிகையை நோன்பி’ எனவே அழைக்கின்றனர். இறைவனிடம் வேண்டுதலைச் 'சாட்டுதல் என்கின்றனர். வேண்டுதல் அல்லது முறையிடல் என்ற பொருளில் வரும் சாற்றுதலின் மருவாக இது இருக்கலாம். வருதி, போதி, வருக, வாருக, போக, தின்னுக என்னும் வியங்கோள் வினைகள் இவர்தம் வழக்கத்தில் சாதாரணமாக உள்ளன. கூவி ஏலம் எடுத்து ஒப்பந்தம் பெறும் (Contract) ஒன்றை இவர்கள் கூப்பு' என்ற சொல்லிலே அழைக்கின்றனர். இவர்கள் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும் முறை, பெயரன், பெயர்த்தி என்ற பாட்டன் பாட்டி வழி மரபுப் பெயர் களாகவே உள்ளது. இவ்வாறு இவர்தம் மொழிநலம் உயர்ந்த ஒன்றாகின்றது. எனவே எங்கோ ஒதுக்கிடங்களில் தனித்து வாழும் இக்கல்லா மரபினர் (T.P) வாழ்வை நுணுகி ஆராயின் எத்தனையோ உண்மைகள் புலனாகும். ஒவ்வொரு வாழ்வு நெறியிலும் இம்மலைவாழ்மக்கள் தமக்கென அமைந்த வழியிலே சமுதாய உணர்வோடும் தெய்வ நம்பிக்