பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கல்லவை ஆற்றுமின் கின்றனர். திரு. வா. தி. மா. அவர்தம் உலையா உழைப்பி னால் வளர்ந்த பள்ளி இன்று அவர் பெயராலேயே மேநிலைப் பள்ளியாய்ச் சிறக்க ஓங்கி உள்ள நிலை அவர்தம் தூய உள்ளத்தினையும் தொண்டு நிலையையும் எடுத்துக் காட்டுகிறது. அந்தக் காலத்தில்-தொடக்க நாளில் அவருக்கு உடன் நின்று உதவியவர் அந்த ஊரிலேயே வாழ்ந்த தானப்ப செட்டியாரின் மகனார் கன்னிவேலு செட்டியார் அவர்கள். பின், 1932-33க்குப் பிறகு, திரு. வா. தி. மா. அவர்தம் அண்ணார் திரு. வா. தி. பஞ்சாட்சர முதலியார் அவர்கள் படையாளர் கணக்குத் துறையிலிருந்து ஓய்வு பெற்று, பூனாவி லிருந்து திரும்பினார். அப்போது பள்ளி வளர்ந்து பெரும் பொருள் முட்டுப்பாட்டினைக் கண்டது. அரசாங்க மானியம் ஓரளவிலேயே நின்றதால், முழுதும் நினைத்தபடி செயலாற்ற முடியவில்லை. அப்பா எனும் வா. தி. மா. அவர்தம் கல்வி ஆர்வத்துக்கு அரசாங்கம் ஈடு கொடுத்து உதவ முடியவில்லை. அப்போதுதான் திரு. வா. தி, ப. அவர்கள் தாம் வந்தவுடன் தாமும் தம்பியும் உயிர் ஒப்பந்த நிதி முகவர்களாக இருந்து நலன் காண முயன்றார். அதில் வெற்றியும் பெற்றார். சில ஆண்டுகளுக்குப் பின் அவர் மறைய, அவருக்குப் பின்பும் திரு. வா. தி. மா. அவர்கள் வேறு ஒன்றையும் கருத்தில் வையாது பள்ளி ஒன்றையே குறியாகக் கொண்டார். பரந்த நிலப் பரப்பை வாங்கினார். நாட்டில் உள்ள நல்லவர் பலரை வருமாறு பணித்து, பள்ளியின் செயல்முறைகளைக் காட்டி, அனைவர்தம் பாராட்டினையும் பெற்றார். இன்றைய விடுதியுள்ள இடத்தினை அப்பா அவர்களும் பெரியப்பா அவர்களும் வாங்கிய நாளில் இதன் வளர்ச்சி இத்துணை உயர்வு பெறும் என எண்ணி இருக்கமாட்டார்கள். அப்பா அவர்தம் தூய சிந்தையும் தொண்டே வாழ்வெனக்