பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கல்லவை ஆற்றுமின் உள்ளன. அரசாங்க உதவியுடன் நடைபெறும் பள்ளிகளைக் காட்டிலும் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்துடன் பெற்றோர் இப்பள்ளிகளை நாடும்போது இவற்றின் தரம் உயர்ந்திருக்க வேண்டாமா? மாறாக ரூ. 50க்கும் ரூ. 60க்கும் தகுதியற்ற ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கும் இரண்டு மூன்று வகுப்புகளை ஒரே நேரத்தில் கொடுத்துப் பயிற்று விக்கச் சொன்னால் அவர்களால் என்ன செய்ய முடியும்? ஆங்கில மோகத்தில் ஆழ்ந்திருக்கும் சில பெரியோர்களைத் திருப்திப் படுத்தும் வகையில் ஆங்கிலோ இந்தியப் பெண் களை-யாதொரு கல்வித் தகுதியும் இல்லையாயினும் பலர் நியமிக்கின்றனர். அவர்களுடைய பேச்சுக் கொச்சை ஆங்கிலமாக இருக்குமே ஒழிய, இலக்கண அடிப்படைப் பேச்சோ, எழுத்தோ அவர்களிடம் பயிலும் மாணவர்களுக்கு வருவதில்லை. இதனாலும் குழந்தைகள் பள்ளியின் தரம் குறைகின்றது. மேலை நாடுகளில் இக்குழந்தைகள் பள்ளிகளைப் பற்றித் தனித்த அக்கறை எடுத்துக் கொண்டு அரசாங்கங்கள் செயலாற்றுகின்றன. பல துணைக் கருவிகளை வாரி வழங்கு கின்றன. அவற்றின் முயற்சியில் இளஞ்சிறுவர்தம் அறிவும் ஆற்றலும் வளர்வதை அறிய முடிகின்றது. ஆனால் நம் நாட்டு அரசாங்கமும் அது பற்றிக் கவலையுறவில்லை. தொடங்கி நடத்துபவரில் பலரும் அது பற்றிக் கவலை கொள்ளக் காணோம். எனவே இக்குழந்தைகள் பள்ளிகளால் போதுமான வகையில் கல்வி வளரவில்லை என்பது கண்கூடு. குழந்தைகளின் கல்வி சீராக அமைய வேண்டுமானால் அரசாங்கமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் ஆரம்பக் கல்வி, உயர்தரக் கல்விக் கூடங்களைப் போன்று வெறும் கூட்டமாக அமைத்து விடாது தரத்தொடு செயல்பட வழி வகை காண வேண்டும். அப்படியே தனியார் நடத்தும்