பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கல்லவை ஆற்றுமின் இளங்குழந்தைகளின் கல்வித்தரம் ஒழுங்கில்லாத ஒரே காரணம்தான் நாட்டில் இன்றைய கல்விக்கூடங்களெல்லாம் 'ஆரவாரக் கூட்டங்களாக மாறுகின்ற நிலையில் நம்மை வைத்துள்ளது. இளம்குழந்தைகள் உள்ளம் மாசு படியின் பின் வாழ்வு சிறக்குமா? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? எனவே நாடு சிறக்க வேண்டுமாயின்-வருங் காலச் சமுதாயம் வளமுடையதாக வேண்டுமாயின்-இளம் குழந்தைகள் கல்வி முறை செம்மையுற வேண்டும். அரசாங்கமும் தனி மனிதரும் சமுதாயமும் இந்த வகையில் எண்ணிச் செயலாற்ற வேண்டுவது உடன் செய்ய வேண்டிய இன்றியமையாக் கடமையாகும். உடன் செயலாற்றிச் சிறக்க வழி காண்பாம் வாரீர்” என அனைவரையும் அழைக் கிறேன். தேவை - உயர்ந்த குறிக்கோள் இன்றைய மாணவரிடை “உயர்ந்த குறிக்கோள்’ இடம் பெறாமையே சிக்கல்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது, வருங்காலச் சமுதாயத்தை வாழவைக்க வேண்டியவர்கள் மாணவர்கள். கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் நாளை நாட்டை ஆளவும் சீர்திருத்த வும் செம்மைப்படுத்தவும் வேண்டியவராவர். அவர்தம் செம்மை நலம் பொருந்திய, ஒழுக்கநெறியும் பண்பாட்டு வாழ்க்கையும் நாட்டையும் உலகையும் நடத்திச் செல்லும் திறம் பெற்றன, இத்தகைய மாணவர்களிடையே இன்று உலகமெங்கணும் அமைதி நிலவவில்லையோ என நினைக்கத் தக்க வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுவதைக் காண்கின் றோம். அமைதி, ஒழுங்கு, கட்டுப்பாடு, கடம்ை உணர்ச்சி