உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்விமுறை நன்கு அமைவதாக i55 கல்வியின் அடிப்படை இத்தகைய உயர்ந்த குறிக்கோள்சமுதாயம் எல்லாக் குறையும் இல்லாத வாழ வழி வகுக்கும் குறிக்கோள்-மாணவர்தம் வாழ்வில் இடம் பெற வேண்டும். சமயம், அறம், ஒழுக்கம் என்று கூறும் அத்தனையும் இந்த உண்மையிலேயே அடங்கும். எல்லாரும் - எல்லா உயிரும் நம்மவரே-நம்இனமே என்ற பரந்த உணர்வோடு பயிலும் மாணவர் தம் வாழ்வை வகுத்துக் கொள்வார்களானால்'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உணர்வு கல்வியால் விளையும் நிலை உண்டானால்-அன்று நாட்டிலும் உலகிலும் எந்தச் சிக்கலும் தலைகாட்டாது. மாணவர் சமுதாயம் அந்த வகையில் உணர்ந்து முன்னேற்றம் அடையவேண்டும். அவர்களை அந்த நெறிக்கு உரியவர்களாக்கும் வழியை ஆசிரியர்களும் அரசாங்கமும் செம்மைப்படுத்தித் தருதல் வேண்டும். நாட்டுக் கல்விமுறை நன்கு அமைவதாக கடந்த சில மாதங்களாக, நாட்டின் கல்வித்தரம் குறைந்து வந்துள்ளதென மாநில மத்திய அமைச்சர்களும் செயலர்களும் பிறரும் பேசி வருகின்றனர், ஏன்? ஆசிரியர் தின விழாவில் குடியரசுத் தலைவர் அவர்களே அது பற்றிக் கூறி வேதனைப்பட்டுள்ளார். ஆயினும் ஏன் இந்த நிலை என எண்ணிப்பார்க்க நேரமில்லை. இன்றைக்கு எண்பது ஆண்டுகளுக்கு முன் எந்தக் கல்வி முறை வேண்டாம் என்று பாரதி அழுது அழுது பாடினானோ, அதே கல்வி முறை யினைத்தான் விடுதலை பெற்று அரை நூற்றாண்டை எட்டும் காலத்திலும் வைத்துக் கொண்டிருக்கிறோம்.