பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கல்லவை ஆற்றுமின் எனச் சொல்லியுள்ளார். அவரே பின் மரபியலுள், மேற்கிளர்ந் தெடுத்த யாப்பினுட் பொருளொடு சில்வகை எழுத்திற் செய்யுட் டாகிச் சொல்லும் காலை உரையகத் தடக்கி நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத் தாகித் துளக்கல் ஆகாத் துணைமை எய்தி அளக்கல் ஆகா அரும்பொருட் டாகிப் பல்வகை யானும் பயன்தெரி புடையது சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர் (மரபியல்-646) எனச் சூத்திரத்தின் இயல்பினைக் கூறுகின்றார். இது பொருந்துமா என்பதே கேள்வி. மேல் ஆடி நிழல் போல அறிய எளிமை உடையதாக இருக்க வேண்டும் எனச் சூத்திரஞ் செய்தவர், பின் இவ்வாறு சில்வகை எழுத்தில், உரையகத்தடக்கி, நுண்மையொடு ஒண்மை பெற்று, துளக்க லாகாது, அளக்கலாகாது மாகிய அரும் பொருள் கொண்டு பல்வகைப் பயன் தெரிவது எனக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? தொல்காப்பியர் சூத்திரங்கள் அனைத்துமே அவர் செய்யுள் இயலில் கூறிய சூத்திரத்துக்கு ஒப்பவே எளிமையில் அமைகின்றன. எனவே மரபியல் சூத்திரம் இடைச்செருகலோ என எண்ணவேண்டியுள்ளது என்பது போன்ற நிலை உண்டாவது இயற்கை. எனினும் ஆழ்ந்து காணின் இரண்டும் ஒன்றே என்பது விளங்கும். மேலும் தொல்காப்பியச் சூத்திரங்கள் அத்தனையும் அவ்வாறு எளிமையானவையுமல்ல. உரை எழுத வந்த பேராசிரியர் மரபியல் சூத்திரத்தில் வரும் ஒவ்வொரு சிறப்பியலுக்கும் தொல்காப்பியத்திலிருந்தே மேற்கோள் காட்டி, சூத்திர அமைதி மரபியலில் காட்டிய முறையே சரி எனவும் விளக்கு கின்றார். சில்வகை எழுத்தின் செய்யுட் டாகி' என்பதற்கு ஆடிநிழலின் அறியச் செய்யுங்கால், அதுபோல ஒருவழிப் பொருளடக்கி ஒருவழி வெள்ளிடை கிடப்பச் செய்யப்படாது,