பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 கல்லவை ஆற்றுமின் தயார் செய்கின்றனர். சில சமயங்களில் பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியருக்கே கூட விளக்கமாகாத பொருள்கள் இருக்கும். இப்படித் தரம் கெட்ட-உயர்ந்ததாயினும் புரியாத-தெரியாத நிலையில், மாணவர் நிலை உயருவ தெங்கே? ஒரு முறை 12ஆம் வகுப்பிற்குத் தேவையில்லாத பாட நூலைப் பல ஆயிரம் செலவு செய்து வெளியிட்டுப் பின் பாழாக்கினர். ஆசிரியர்களும், மதுரையில் கல்வி அமைச்சர் கூறியவாறு தம் கடமை உணர்ந்து செயலாற்றவில்லை. பல ஆசிரியர்கள் இப்பள்ளி அல்லது கல்லூரிப் பணியினை, இரண்டாம் பக்கப் பணியாகவே, கொள்ளுகிறார்கள் என்பதைப் பலர் அறிவர். பல கல்லூரிகளில் அரசாங்கக் கல்லூரி உட்பட-சில பாடங் களுக்கு ஆண்டு முழுவதுக்கும் கூட ஆசிரியர்கள் நியமிக்கப் பெறுவதில்லை. பள்ளியில் 60, 70, 80 மாணவருக்கு ஒரு ஆசிரியர் பாடம் கற்பிப்பார். இந்த நிலை கல்வி வளர்ச்சிக்கு அடிப்படையாகுமா? 'ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழ் நாட்டு மாணவர்கள் அதிகம் வெற்றி பெறவில்லை என்று மத்திய அரசாங்கத்துக்கு அறிவிப்பதாகச் செய்தி வந்தது. ஆனால் தமிழ்நாட்டு மாணவர்களும் அரசும் அதில் அக்கறை காட்டாததே அதற்கு முக்கிய காரணம். நானும் காலஞ்சென்ற தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்களும் அத்தேர்விற்குத் தமிழில் ஒரு தாள் எழுத ஏற்பாடு செய்ய மிகவும் முயற்சி செய்து வெற்றியும் பெற்றோம். இத்தேர்விற்கு முதல் இரண்டாண்டு அவர்களும் அடுத்த இரண்டாண்டு நானும் தேர்வாளராக இருந்தோம். அப்போது தேர்வு எழுதிய மாணவர்கள் தரம் தமிழிலேயே அவ்வளவு மட்டமாக இருந்தமை கண்டு வேதனைப்பட்டோம். (தற்போது அத்தாள்-தமிழில் உள்ளதா எனத் தெரியாது) எனவே மாணவர்கள் அடிப்படையிலிருந்தே-ஆரம்பப் பள்ளியிலிருந்தே சரியாகப்