பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 நல்லவை ஆற்றுமின் இந்தக் கல்வியினை வற்புறுத்தும் எனச் செய்தித்தாள்கள் வழியறிகிறேன். ஆயினும், அதனால் மட்டும் பயனில்லை; அதில் பயின்றோர் வாழ்வு வறண்ட பாலை நிலையாகும், எனவே அவர்கள் இத்தகைய துறைகளில் பயில்வோருக்கு அரசாங்க எழுத்தர் போன்ற பதவிகளும் பிறகல்விக்கேற்ற பதவிகளும் அளிக்கப் பெற வேண்டும் என் அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும். கல்வி முறையை மட்டும் திருத்தி அதைப் பயில வாழ வகையற்றுப் போகும் நிலை கூடாது. நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி, வாய்ப்பச் செயல் என்ற வள்ளுவர் வாக்கு கல்வித்துறைக்கும் பொருந்துவதாகும். +2 முறையிலும் பிற்பட்ட வகுப்பிலும் கணிப்பொறி, விண் ஆய்வு' போன்றவை தொடங்கி சாதாரணக் கூட்டுத் தொழில் வரையில் புகுத்திப் பயில வாய்ப்பு அளிப்பின் அவற்றுள் பயிலும் மாணவர்கள் நிச்சயமாகத் தம் வாழ்வை நன்கு அமைத்துக் கொள்ள வழி பிறக்கும். நாடு நாடாகும். இன்றேல் யார் அறிவார்? கல்வித்துறையில் மொழி பற்றிய சிக்கல் உரிமைப்பெற்று அரை நூற்றாண்டைக் கடக்கும் நிலையிலும் தீராதது வேதனைக்குரியது. தமிழ்நாட்டில் பயிலும் மாணவர் தமிழைப் பயிலாமலே பொறியாளர், மருத்துவர், கலை, அறிவியல் அறிஞர் (டாக்டர்) பட்டம் வரை எளிதில் பெற முடியும். இந்த அவல நிலை தமிழ்நாட்டைப் பிற மொழி யாளர் ஆதிக்கத்தில் ஆழ்த்துமன்றோ. தமிழைப் பேருக்கு முதன் மொழியாகக் கூறினும் பிரஞ்சு, ஜெர்மன் போன்ற அன்னிய மொழிகளோடும் இந்தி, வடமொழி, உருது போன்ற மொழிகளோடும் பதினான்கு மொழிகளுள் ஒன்றாக உள்ளது. ஆனால் அண்டை நாடான கன்னட்த்தில் கன்னடம் பயிலாது எட்டாம் வகுப்பினைத் தாண்ட முடியாது. மராட்டிய நாட்டிலோ மராட்டி மொழி பயிலாது பள்ளிப் படிப்பை முடிக்க முடியாது. அப்படியே வேறு சில மாநிலக் கல்வித்