உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்விமுறை நன்கு அமைவதாக 1.65 கொள்கையை வற்புறுத்துவதனால் அதில் தமிழ் கட்டாய மொழியாகவும் மற்றது வேற்று மொழியாகவும் இருக்க அமைப்பின் பொருள் உண்டு. இன்றேல் தமிழ் பிற மாநில மொழிகள், பிரஞ்சு, செர்மன் இவற்றோடு ஒன்றாகி நின்று, தமிழைத் தொடாமலே தமிழ் நாட்டில் பட்டம் பெற வழி காட்டுகிறது. இது தமிழை வளர்ப்பதாகுமா? பல்கலைக்கழகங்களின் நிலையினை எண்ணின் வருந்த வேண்டியுள்ளது. சில பல்கலைக் கழகங்கள் அவல நிலை களை நாளிதழ்களில் காண்கிறோம். மாணவர்கள் சூன் மாதம் வகுப்புகளில் சேர்க்கப் பெற வேண்டும்; அடுத்த நவம்பர் அல்லது மார்ச்சில் தேர்வு. ஆனால், பல்கலைக் கழகங்களோ ஆகஸ்டு, செப்டம்பரில் புதிய வகுப்புகள் தொடங்க ஆணை பிறப்பிக்கின்றன. எல்லாப் பாடங்களை யும் குறைந்த இடைக்காலத்தில் மாணவர் எப்படிப் பயில முடியும்? நன்கு வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ் போன்றவற்றில் முதலிடம் பெற முடியும்? இதற்கு முந்திய ஆண்டு செப்டம்பரிலேயே விண்ணப்பங் கள் பெறப்பட்டன. இசைவுதர ஓராண்டு தேவையா? முன்பெல்லாம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆய்வுக் குழுக்கள் அனுப்பப் பெற்று, கருத்தினைப் பெற முடியும். பின் மார்ச், ஏப்ரல் ஆட்சிக்குழு கூட்டங்களில் உரிய முறையில் ஆய்ந்து தேவையை நிறைவேற்ற, மே மாதத்துக்குள் புதிய வகுப்புகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப் பெறும். இன்று ஆகஸ்டில் குழு அமைத்து அடுத்து உத்தரவு பிறப்பிக்கும் அவல நிலையில் மாணவர் நன்கு பயில முடியுமோ? இவற்றை யெல்லாம் எண்ணிப் பார்த்தால் 'ஐ.ஏ.எஸ்’ போன்றவற்றில் தமிழகம் தன் நிலை இழந்தமைக்குக் காரணம் நன்கு புரியும். மற்றொன்றும் கூற வேண்டும். பள்ளிக்கோ கல்லூரிக்கோ வேண்டிய பாட நூல்களை உரிய நாளில் அரசாங்கமும் பல்கலைக்கழகங்களும் வெளியிடுவதில்லை. இதனாலும்