உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கல்லவை ஆற்றுமின் விடுகில மருங்கின் படுபுல் லார்ந்து நெடுநில மருங்கின் மக்கட்கெல்லாம் பிறந்தநாள் தொட்டுச் சிறந்ததன் தீம்பால் அறந்தரு நெஞ்சொடு அருள்சுரங் தூட்டும் இதனொடு வந்த செற்றம் என்னை (13,51-55) என்பது அவர் வாக்கு. அவ்வாறே வள்ளுவர் வழிநின்றும் அவர் வாய்மொழி யினைக் காட்டியும் இருமுறை சிறந்த வகையில் கற்பின் பொற்பினைக் காட்டுகிறார். மண்டிணி ஞாலத்து மழை வளம் தரும் பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகார் (22,44-45) என்ற அடிகளால் பிறர் நெஞ்சு புகாத பெருங்கற்பினைக் காட்டி. "தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற அப் - பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் (22,59-61) என்று வள்ளுவர் வாய்மொழி காட்டி, அவரையும் பொய்யில் புலவர் எனப் புகழ்கின்றார். பக்கள் வாழ்வில் நீக்க வேண்டிய பத்துக் குற்றங்கள் எவை எவை என்பதையும் மக்கள் கடிய வேண்டிய கொடு மைகள் ஐந்து எவை என்பதையும் விளக்கி, அவை அனைத்தும் சமூக வாழ்விலிருந்து நீங்கினாலன்றி உயிர் களுக்கு உய்வில்லை என்பதனை அறவணவடிகள் வாயிலாகச் சாத்தனார் விளக்குகிறார். ஆயினும் மனித இனம் இவற்றை நீக்காத காரணத்தினால்தான் அல்லல் சகதி யில் ஆழ்ந்து துயர் உறுகின்றது. நாட்டில் மக்கள் பசியும் பிணியும் பகையும் நீங்கி வாழ்ந் தாலன்றி விழாக்கள் பல கொண்டாடுவதில் பயனில்லை