பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நல்லவை ஆற்றுமின் வருவான்-நம்மை அணைப்பான்-போற்றுவான்-புரப்பான் : பிறவாத பெருநெறியைத் தருவான். அனைவரும் முயல்வோ மாக! இத்தகைய தெய்வத் தொண்டு சிறக்கும் வகையில் அம்மையார் குப்பத்தில் ஐந்நிலைக் கோபுரம் எழுப்பி ஆண்டவன் கோயிலை அணி செய்து குடமுழக்கிட்டுக் கும்பிடும் அன்பர்தம் அடி பணிந்து, அவர்கள் பணி சிறக்க என வாழ்த்தி அமைகின்றேன். எங்கும் சிவனருள்! யாவினும் அவனருள் தம்மை மறந்த மெய்யடியார்கள் யாண்டும் இறை வனையே காண்பர். அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியுள்ள இறைவன் தம் அடியவர் பொருட்டு பல அருட் செயல்களைச் செய்து கொண்டே இருக்கிறான். பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்க மறநிறைகின்ற பரமன் தன்மையை அடியவர் அனை வரும் ஐம்புலங்களாலும் உற்று உணர்ந்து போற்றுகின்றனர். எனவே அவர் செய லனைத்தும் அருளாகவே படுகின்றன. 'நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே என்பார் மணிவாசகர். இதன் வழி அனைத்தும் அவனருள் என்று உணர்த்துகிறார். அவன் அருள் நிலையினை இரண்டாக அறக்கருணை, மறக்கருணை என்பர் நல்லோர். ஆகவே அடிப்பதும் அணைப்பதும் அவனருளேயாகும். அடித் தடித்து அக்காரம் முன் தீற்றிய அற்புதம் என்கிறார் மணிவாசகர். சேக்கிழார் அத்தகைய தெய்வ நலம் சார்ந்த பண்பாட்டு அடியவர் மரபில் வந்தவர். அவர் அடியார் வரலாறுகளைப் பாடும்போது எங்கும் அருள் நிலையினையே காண்கின்றார்.