பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் 53 முருகன் பேசப் பெறுவதோடு, தேவாரம் போன்ற பிற்கால இலக்கியங்களிலும் முருகன் இடம் பெற்றுள்ளான். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருணகிரிநாதர் சந்தத் திருப்புகழ் பல்லாயிரத்தால் முருகனைப் பாடியுள்ளார். அது 'திருப்புகழ்' என்றே போற்றப்பட்டு, பலராலும் பாராயணம் செய்யப் பெறுகின்றது. பின் வந்த தேவராயப் பிள்ளை பாடிய கந்த சஷ்டி கவசமும், குமர குருபரர் பாடிய கந்தர் கலிவெண்பாவும் சங்க கால நக்கீரர்தம் திருமுருகாற்றுப் படையும் பாராயண நூல்களாகப் போற்றப் பெறுகின்றன. இன்றும் எத்தனையோ அடியவர்கள் புத்தம் புதிய பாடல் களை அந்தாதியாக, கோவையாக, கலம்பகமாக, பிள்ளைத் தமிழாகப் பாடிப் பரவுகின்றனர். திருச்செந்தூர் போன்ற தலங்களில் இந்துக்கள் மட்டுமன்றிப் பிற சமயத்தவர்களும் முருகனுக்குக் காணிக்கை செலுத்தி வழிபடுவதை இன்றும் காணலாம். முருகனை அன்றி அவன் மயிலையும் வேலையும் கூடப் பாடுபவர் உளர். எனவே சங்க காலத்துக்கு முன்பிருந்து இன்று வரையில் தமிழ் நாட்டுத் தெய்வமாக, அதே வேளையில், கந்த புராண சுப்பிரமணியனாக மக்களால்-சிறப்பாகத் தமிழ் மக்களால் போற்றப் பெறும் முருகன் வரந்தரு தெய்வமாக-வாழ் வளிக்கும் தெய்வமாக-பலர் பாடுவது போன்ற கண்கண்ட தெய்வமாக-கலியுக வரதனாக விளங்குகிறான்-விளங்கு வான் என்பது தெளிந்த உண்மையாகும்.